/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜன 10, 2024 12:50 AM
மதுரை,
சுற்றுச்சூழல் தொடர்பான சேவையில் ஈடுபட்டுள்ளோர், பசுமை சாம்பியன் விருது'க்கு விண்ணப்பிக்கலாம் என, மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை சார்பில் சுற்றுசசூழல் பாதுகாப்பு, விழிப்புணர்வுக்காக தங்களை அர்ப்பணித்து பாடுபடுவோர் 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது, ரூ.10 ஆயிரம் பணமுடிப்பு வழங்கப்படுகிறது. தனிநபர்கள், நிறுவனம், பள்ளி, கல்லுாரி, குடியிருப்போர் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நீர்நிலை பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, இதர திட்டங்கள் என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்படும்.
கலெக்டர் தலைமையிலான குழு தேர்வு செய்யும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,www.tnpcb.gov.inஎன்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க 2024 ஏப்.15 கடைசி தேதி. கூடுதல் தகவலுக்கு சுற்றுச்சூழல் செயற்பொறியாளரை நேரில் அணுகலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

