நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மேற்கு கல்வி ஒன்றியம் வட்டார வளமைய அலுவலகத்தில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்டு சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களை மாநகராட்சி துணை கமிஷனர் சரவணன், கல்வி அலுவலர் மாரிமுத்து பாராட்டினர்.
நிகழ்ச்சியில் மேற்கு வட்டார கல்வி அலுவலர் ஜோஸ்பின் ரூபி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் காமாட்சி, இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

