நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை ஜனகல்யாண் காஞ்சி காமகோடி பீடம் சார்பில் விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது. ஜனகல்யாண் வழக்கறிஞர் அணி தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். டாக்டர் சொக்கலிங்கத்திற்கு விருது வழங்கப்பட்டது.
நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., சார்பில் விருதை அவரது மகன் விஜய் நயினார், மதுரை தியாகராஜர் மில்ஸ் மற்றும் கல்விக்குழும நிர்வாக இயக்குனர் ஹரி தியாகராஜன் சார்பில் விருதை தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் அருணகிரி பெற்றுக் கொண்டனர்.
மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், தமிழக சைவ வேளாளர் சங்க முன்னாள் தலைவர் பகவதி முத்துப் பிள்ளையின் உருவப் படங்களை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

