நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி வேலை வாய்ப்பு துறை சார்பில் வங்கி, நிதித்துறை, காப்பீட்டு துறையிலுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார்.
வணிகவியல் துறைத் தலைவர் துரைசாமி அறிமுக உரையாற்றினார். பெங்களூரு புரோ எச் நிறுவனம் வெங்கடகிருஷ்ணன், விஜயகுமார் பேசினர்.
வணிகவியல் துறை தலைவர் துரைசாமி, வேலைவாய்ப்புத்துறை உறுப்பினர்கள் கார்த்திக், புவனேஸ்வரி, பாண்டியராஜன் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயந்தி முகாம் ஏற்பாடுகள் செய்தார்.

