ADDED : மார் 26, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி கோட்ட மின் ஊழியர்கள் மற்றும் களப்பணியாளர்கள், மின் பராமரிப்பு பணியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் செயற் பொறியாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
உதவி செயற்பொறியாளர்கள் உசிலம்பட்டி ரவிச்சந்திரன், செக்கானுாரணி காசிலிங்கம், உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.
மின் தடையை சரி செய்ய, பழுது நீக்க செல்லும் மின் களப்பணியாளர்கள் பழுது பார்க்கும் இடங்களில் மின் தடை செய்யப்பட்டதா என பார்க்க வேண்டும். பாதுகாப்பு சாதனங்களான எர்த் ராடு, இடுப்பு கயறு, கிளவுஸ் அணிந்து போதிய கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.