/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஏலம் எடுத்தது ஒரு மரம் வெட்டுவது வேறு மரம்
/
ஏலம் எடுத்தது ஒரு மரம் வெட்டுவது வேறு மரம்
ADDED : ஜன 14, 2024 04:34 AM

மேலுார் : பூதமங்கலம் ஊராட்சி நீர்வளத்துறை ஆரிக்கண்மாயில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஏலம் எடுத்த ஆறுமுகம் பலவகை மரங்களையும் வெட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
விவசாயி மதி: வேறு வகையான மரங்களை வெட்டினால் அம்மரங்களின் மதிப்பை போல் பத்து மடங்கு அபாரத தொகை வசூல் செய்யப்படும் என்ற விதிக்கு கையெழுத்து இட்டார். தற்போது வேம்பு, வேலா, மஞ்சந்தி உள்ளிட்ட பல வகையான மரங்களை வெட்டி கூடுதல் விலைக்கு விற்றுள்ளார்.
குத்தகைதாரர் ஆறுமுகம்: சீமைகருவேல மரங்களை அகற்ற ரூ.8850க்கு ஏலத்தில் எடுத்துள்ளேன். மரம் வெட்டுபவர்கள் தவறுதலாக வேறு வகையான மரங்களை வெட்டிவிட்டனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர்: ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

