/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தலில் ஓட்டளிக்க பயோமெட்ரிக் முறை குறைதீர் கூட்டத்தில் மனு
/
தேர்தலில் ஓட்டளிக்க பயோமெட்ரிக் முறை குறைதீர் கூட்டத்தில் மனு
தேர்தலில் ஓட்டளிக்க பயோமெட்ரிக் முறை குறைதீர் கூட்டத்தில் மனு
தேர்தலில் ஓட்டளிக்க பயோமெட்ரிக் முறை குறைதீர் கூட்டத்தில் மனு
ADDED : ஜன 23, 2024 04:44 AM
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், சமூகநலத் திட்ட துணை கலெக்டர் சவுந்தர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலுார் வலைசேரிப்பட்டி சரவணன் வழங்கிய மனுவில், ''வாக்காளர்கள் பணம், பொருட்கள் வாங்காமல் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும். ஜன.,25 தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பணம் பெறாமல் ஓட்டளிக்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய நோட்டீைஸ அரசு அலுவலகங்களில் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். குடியரசு தின நாளில் மாவட்டத்தில்உள்ள 420 கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களில் இதனை உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பயோ மெட்ரிக் முறையில் ஆதார் அட்டை, ரேஷனில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதை பயன்படுத்தி வரும் லோக்சபா தேர்தலிலும் வாக்காளரை சரிபார்த்து ஓட்டளிக்கும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சித்தாலை தங்கவைரவன் அளித்தமனுவில், ''சித்தாலை சுந்தரவல்லி அம்மன் கோயில் டிரஸ்டியாக உள்ளேன். கோயிலில் சிவராத்திரியையொட்டி குல வழக்கப்படி பெட்டியெடுத்து மருளாடி விழா, நாடகம் நடத்த அனுமதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். முன்னதாக கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

