ADDED : செப் 19, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அரசு மருத்துவமனை ரத்த மையம் சார்பில் அமெரிக்கன் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமை கல்லுாரி முதல்வர் பால்ஜெயகர், மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், ரத்த மையத்துறைத் தலைவர் டாக்டர் சிந்தா, அமெரிக்கன் கல்லுாரியின் நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வன் துவங்கி வைத்தனர். முகாமில் 527 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் செய்தது.

