நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை திருநகர் சாரா நடுநிலைப்பள்ளி அருகில் மழை நீர் வடிகால் சேதமடைந்து கழிவு நீர் ரோட்டில் சென்றது. அதனை நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சத்தில் சீரமைக்க முடிவானது.
சிங்கப்பூர் தொழிலதிபர் செட்டி திலீப்பாபு வழங்கியரூ. 4.44 லட்சத்துடன் பணி துவங்கியது. கவுன்சிலர் ஸ்வேதா துவக்கி வைத்தார். திருநகர் பேரூராட்சி முன்னாள் சேர்மன் பலராமன், துணை சேர்மன் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.

