ADDED : ஜன 14, 2024 06:07 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர்கள் பாண்டிதுரை, 26; ராஜதுரை, 28; தங்கதுரை, 30; மூவரும், நேற்று பெரியவடவாடி கிராமத்தில் பன்றி வாங்கிக் கொண்டு, பைக்கில் புறப்பட்டனர்.
பகல் 2:30 மணிக்கு விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் வந்தபோது, அவ்வழியே வந்த இனோவா கார் மோதியது. இதில், மூவரும் துாக்கி எறியப்பட்டனர். மேலும், கட்டுப்பாட்டை இழந்த கார் செம்பளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் ஓட்டி வந்த பைக் மீதும் மோதியது.
விபத்தில், பாண்டிதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜதுரை, தங்கதுரை, ராமலிங்கம் மற்றும் அவருடன் வந்த கண்ணதாசன் ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

