/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொது விசாரணையில் துப்புரவு பணியாளர்கள்
/
பொது விசாரணையில் துப்புரவு பணியாளர்கள்
ADDED : ஜன 21, 2024 03:46 AM
மதுரை: மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கிராம துப்புரவு பணியாளர்கள் நீதி கேட்கும் பொது விசாரணை மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது.
வழக்கறிஞர் மதிப்பிரியங்கா வரவேற்றார். வழக்கறிஞர் சகாய பிலோமின்ராஜ் விசாரணை செய்வதன் நோக்கத்தை விளக்கினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார்.
வழக்கறிஞர் ஸ்டாலின், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் கருணாநிதி, கே.கே.சாமி முன்னிலை வகித்தனர்.
பொது விசாரணையின் 22 துப்புரவு பணியாளர்கள் தங்களது பிரச்னைகளை முன்வைத்தனர்.
நடுவர்கள் ஜக்கையன், கல்யாணந்தி, மார்கிரேட் கலைச்செல்வி, பிரிட்டோ, ராமஜெயம் ஆகியோர் தீர்வுக்கான வழிமுறைகளை தெரிவித்ததோடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் முத்தையா, சசிகுமார், உதயக்குமார், முத்துக்குமார் ஒருங்கிணைத்தனர்.

