நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அசாமில் காங்., எம்.பி., ராகுலின் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது பா.ஜ., தொண்டர்கள் தாக்க முயன்றதை கண்டித்து மதுரை தல்லாகுளத்தில் நகர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, கவுன்சிலர்கள் முருகன், ராஜ் பிரதாபன், வி.முருகன், துணைத் தலைவர்கள் மயிலேறி, மலர் பாண்டியன், பாலு, ரவிச்சந்திரன், செயலாளர்கள் சரவணன், காமராஜ், மகளிரணி நிர்வாகிகள் ஷானவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

