/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரத்து இருந்தாலும் விலைகூடிய காய்கறி பாகற்காய் மட்டும் பாதியாக குறைந்தது
/
வரத்து இருந்தாலும் விலைகூடிய காய்கறி பாகற்காய் மட்டும் பாதியாக குறைந்தது
வரத்து இருந்தாலும் விலைகூடிய காய்கறி பாகற்காய் மட்டும் பாதியாக குறைந்தது
வரத்து இருந்தாலும் விலைகூடிய காய்கறி பாகற்காய் மட்டும் பாதியாக குறைந்தது
ADDED : ஜன 14, 2024 04:25 AM
மதுரை : உற்பத்தியும் வரத்தும் சீராக இருந்தாலும் தேவை அதிகரித்ததால் பாகற்காய் தவிர மற்ற நாட்டு ரக காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகரித்துஉள்ளது.
நேற்று அவரைக்காய், பீன்ஸ் வகைகள், கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை அதிகரித்துள்ளது. கிலோ ரூ.150க்கு விற்கப்பட்ட கல்லாமை மாங்காய் நேற்று ரூ.180 ஆனது. சின்ன வெங்காயம் ரூ.50லிருந்து ரூ.60ஆகவும் மொச்சை கிலோ ரூ.50ல் இருந்து கிலோ ரூ.80 ஆனது.
முருங்கைக்காய் கிலோ ரூ.140 விலையில் மாற்றமில்லை என்றாலும் ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு காயின் விலை ரூ.20 வரை விற்கப்பட்டது.
வாழைக்காய் ஒன்றின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை கூடியுள்ளது. ஒருநபர் சாப்பிடும் சிறிய இலை 200 எண்ணிக்கை கொண்ட கட்டின் விலை இருமடங்காக அதிகரித்து ரூ.500க்கு விற்பனையானது. 200 எண்ணிக்கை கொண்ட பெரிய இலைக்கட்டு ரூ.500 ல் இருந்து ரூ.850 ஆக எகிறியது.
மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறுகையில்,''கேரட், பீட்ரூட், முள்ளங்கி, டர்னிப், நுாக்கல் விலையில் மாற்றமில்லை.
சாம்பார், கூட்டு, அவியல் என பொங்கலன்று காய்கறிகளை முன்னிலைப்படுத்தி சமையல் செய்யப்படும் என்பதால் வரத்து இருந்தாலும் விலை அதிகரித்துள்ளது. பாகற்காய் கிலோ ரூ.40 விற்ற நிலையில் நேற்று ரூ.20 ஆக குறைந்தது'' என்றார்.

