ADDED : ஜன 19, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: செம்மனிபட்டியில் நெற் கதிர் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் பதரானது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து வேளாண் அதிகாரி சந்திரசேகர் நேற்று நேரில் ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்தார். காப்பீட்டு துறைக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்வதாக விவசாயிகளிடம் கூறினார்.

