/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வயல்களில் பள்ளம் : ஆய்வுக்கு பரிந்துரை
/
வயல்களில் பள்ளம் : ஆய்வுக்கு பரிந்துரை
ADDED : ஜன 19, 2024 05:18 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி வயல்வெளியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலவறை போன்ற பள்ளங்களை ஆய்வு செய்ய வருவாய்த்துறையினர் தொல்லியல் துறைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
உசிலம்பட்டி புத்துார் மலையில் பழமையான பாறை ஓவியங்கள், சமணர் சிற்பங்கள் உள்ளன. மலையடிவாரத்தில் உள்ள மலைப்பட்டி கிராமத்தில் வீரணன் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு, திடீரென ஏற்பட்ட பள்ளத்திற்குள் விழுந்து கத்தியது. தரைப்பகுதியில் இருந்து 6 அடி ஆழத்திற்கு சிறிய குழி போன்ற துவாரம் ஏற்பட்டு, அதற்கு கீழ் பெரிய நிலவறை போன்ற அமைப்பு உள்ளது.
அப்பகுதி சிறுவனை பள்ளத்திற்குள் இறக்கி ஆட்டை மீட்டனர். இதே போன்ற குழியுடன் கூடிய நிலவறை, சிலமாதங்களுக்கு முன் மச்சக்கண்ணன் என்பவர் தோட்டத்திலும் ஏற்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இந்த திடீர் பள்ளங்கள் பழங்கால மக்கள் தானிய சேமிப்புக்கு ஏற்படுத்தியதா, மறைவிடமா போன்ற விபரங்கள் குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்தனர்.

