நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம், நிர்வாகிகள் தேர்வு நடந்தது. 92 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவராக சிவக்குமார், துணைத்தலைவர் அமர்சிங், செயலாளர் அமர்நாத், இணைச் செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் விஷ்ணுகுமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், ஹரிஹரசுதன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சுப்பிரமணியன் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். சங்கம் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 8 மாணவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

