/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலைபேசிகளை கவனமாக கையாள வலியுறுத்தல்
/
அலைபேசிகளை கவனமாக கையாள வலியுறுத்தல்
ADDED : ஜன 10, 2024 12:50 AM
மதுரை, மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் பொதுக் குழுக் கூட்டம் மூட்டா அரங்கில் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.
செயலாளர் பெரியதம்பி மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினார். 80 வயதை நிறைவு செய்த பேராசிரியர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர். நிர்வாகிகள் ஆனந்தன் வரவேற்றார், பெருமாள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.
ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவன நிர்வாகிகள் சிவகுமார், முத்துகிருஷ்ணன், விஜய் பேசுகையில், தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வயதான பேராசிரியர்கள் நவீன அலைபேசிகளை கவனமாக கையாள வேண்டும் என்றனர். ஓய்வு பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், லட்சுமணன், ஜெகநாதன் ஏற்பாடு செய்தனர். பெருமாள் நன்றி கூறினார்.

