/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அக்கா, காதலன் கொலை வழக்கில் தம்பி உள்ளிட்ட நான்கு பேர் கைது
/
அக்கா, காதலன் கொலை வழக்கில் தம்பி உள்ளிட்ட நான்கு பேர் கைது
அக்கா, காதலன் கொலை வழக்கில் தம்பி உள்ளிட்ட நான்கு பேர் கைது
அக்கா, காதலன் கொலை வழக்கில் தம்பி உள்ளிட்ட நான்கு பேர் கைது
ADDED : பிப் 02, 2024 12:21 AM
திருமங்கலம்: மதுரை திருமங்கலம் அருகே திருமணத்திற்கு பின்பு காதலுடன் பேசிக் கொண்டிருந்த அக்காவையும் காதலனையும் வெட்டிக்கொன்ற வழக்கில் தம்பி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் கூடக்கோவில் அருகே கொம்பாடியை சேர்ந்த நந்திப் பெருமாள் மகன் சதீஷ்குமார் 28, கட்டட தொழிலாளி. அதை ஊரைச் சேர்ந்த அழகுமலை மகள் மகாலட்சுமி 23. இருவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மகாலட்சுமிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 3 நாட்களிலேயே கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார்.
பின் தனது காதலனோடு அலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனால் மகாலட்சுமியின் தம்பி பிரவீன் குமார் 20 கண்டித்துள்ளார். ஆனால் போன் பேச்சு தொடர்ந்து உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் மற்றும் நண்பர்கள், 2 நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சதீஷ்குமார் சென்றபோது வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.
தலையை துண்டித்து ஊர் மந்தையில் உள்ள நாடக மேடையில் வைத்துள்ளனர். பின்பு வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த தனது அக்கா மகாலட்சுமியையும் தலை துண்டித்து கொலை செய்தார். தடுக்க வந்த தாயார் சின்ன பிடாரியின் கையையும் வெட்டியுள்ளார்.
இந்த வழக்கில் பிரவீன்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவிய ஆவியூரைச் சேர்ந்த வேல்முருகன் 22, காராளம் மூர்த்தி 23, கொம்பாடி ராமகிருஷ்ணன் 19, ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும்போலீசார் விசாரிக்கின்றனர்.

