sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிறுதானிய உணவு தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி

/

சிறுதானிய உணவு தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி

சிறுதானிய உணவு தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி

சிறுதானிய உணவு தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி


ADDED : செப் 11, 2025 05:12 AM

Google News

ADDED : செப் 11, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : இந்திய தொழில்முனை வோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் சிறுதானிய மதிப்பு கூட்டல் உணவு தயாரிப்பு குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

சத்து மாவு, சிறுதானிய இனிப்பு, கார உணவுகள், பாரம்பரிய உணவு, மசாலா பொருட்கள் தயாரித்தல், காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல், ரெடிமிக்ஸ் உணவு சாதப்பொடி, குழம்பு வகைகள், தொக்கு, பிரியாணி பவுடர், புட்டு மிக்ஸ், அடை மிக்ஸ், மில்லெட் அவல், ஜாம், ஜெல்லி, வடகம், மால்ட் வகை உணவுகள் தயாரிக்க செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.

மாவட்ட தொழில் மையம் மூலம் குடிசைத் தொழில் சான்றிதழ், எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ் இலவசமாக பெற்றுத் தரப்படும். 26 நாட்கள் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை பயிற்சி நடைபெறும். குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் ஆதார் அட்டை நகல், டி.சி., நகல், போட்டோவுடன் அணுகலாம்.

செய்முறைக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். அலைபேசி: 90950 54177.






      Dinamalar
      Follow us