/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 'கேலோ இந்தியா' தேசிய கட்கா போட்டி
/
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 'கேலோ இந்தியா' தேசிய கட்கா போட்டி
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 'கேலோ இந்தியா' தேசிய கட்கா போட்டி
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 'கேலோ இந்தியா' தேசிய கட்கா போட்டி
ADDED : ஜன 21, 2024 03:47 AM
மதுரை: 'கேலோ இந்தியா' தேசிய அளவிலான கட்கா போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (ஜன.,21) காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.
பஞ்சாப்பின் பாரம்பரிய தற்காப்பு கலையான கட்கா, 10 ஆண்டுகளுக்குள் கேலோ இந்தியா, தேசிய விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்றது.
தனிப்பிரிவில் வாள் மட்டும், வாளும் கேடயமும் உள்ள போட்டியாகவும், அணிப் போட்டியாகவும் 3 வகைகளில் நடத்தப்படுகிறது. அரியானா, மத்திய பிரதேசத்தை அடுத்து தமிழகத்தில் அதுவும் மதுரையில் இன்று நடக்கிறது.
கட்கா சங்க மாநிலச் செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் குமரி, கோவை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் உட்பட 15 மாவட்டங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. சிலம்பம் போல இந்த விளையாட்டு இருந்தாலும் போட்டி, விளையாட்டின் விதிமுறை வித்தியாசமானது.
அரக்குப் பொருளால் செய்யப்பட்ட கேடயம், பிரம்பு குச்சியில் உருவாக்கிய வாளுடன் வீரர், வீராங்கனைகள் விளையாடுவர். வாளும் கேடயமும், வீரர்களை தாக்காதவாறு தலைக்கவசம், மார்பு கவசம் அணிந்து விளையாடுவர்.
தமிழக அணியில் ஆடவர் பிரிவில் 5 பேர், மகளிர் பிரிவில் 5 பேர் பங்கேற்கின்றனர்.
இதில் ஈரோட்டில் ஒரு வீராங்கனையும் மற்றவர்கள் அனைவரும் கோவையைச் சேர்ந்தவர்கள். அனைத்துப் போட்டிகளும் நாக்அவுட் முறையில் நடைபெறும் என்றார்.
இதில் முதல்பரிசு பெறும் வீரர்களுக்கு ரூ.2 லட்சம், 2ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3ம் பரிசாக ரூ.ஒரு லட்சத்தை தமிழக அரசு வழங்குகிறது.
இன்று காலை 9:00 மணிக்கு கலெக்டர் சங்கீதா போட்டியை துவக்கி வைக்கிறார். ஆடவர் பிரிவில் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் அணியினர் முதலில் களமிறங்குகின்றனர்.

