ADDED : செப் 18, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி, : வாடிப்பட்டியில் வடக்கு மண்டல் பா.ஜ., சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா நடந்தது. குலசேகரன்கோட்டை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, வாடிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு பரிசு பெட்டகத்தை தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி வழங்கினார். மண்டல் தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை விதித்தார். ஓ.பி.சி., அணி முன்னாள் மாநில துணைத் தலைவர் முரளி ராமசாமி, முன்னாள் மண்டல் தலைவர் வாசு, விளையாட்டு பிரிவு செயலாளர் அருண்குமார், நிர்வாகிகள் சேதுராமன், விஜயகுமார், தர்மராஜன் பங்கேற்றனர். ஹிந்து முன்னணி நிர்வாகி குணசேகரன் நன்றி கூறினார்.

