நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரி பட்டமளிப்பு விழா முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது. துணை முதல்வர் நிம்மா எலிசபெத் வரவேற்றார். முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார்.
தமிழக சிறுபான்மை கமிஷன் தலைவர் அருண் பேசுகையில், மாணவர்கள் கடும் உழைப்புக்குப் பின் பட்டம் பெற்றுள்ளீர்கள். அது சமூக மேம்பாட்டுக்கு பயன்பட வேண்டும்.
தெரசா, காந்தி, அம்பேத்கர் ஆகியோர் சமூகத்திடமிருந்து பெற்றதை விட அவர்கள் சமூகத்திற்கு கொடுத்தவை அதிகம். அதனால் தான் சிறந்த தலைவர்களாக மதிக்கப்படுகின்றனர் என்றார். இளங்கலை, முதுகலை என 1174 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் பேரவை தலைவி லொரைன் ரெஜி நன்றி கூறினார்.