sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மூலிகை சோப்பு இலவச பயிற்சி

/

மூலிகை சோப்பு இலவச பயிற்சி

மூலிகை சோப்பு இலவச பயிற்சி

மூலிகை சோப்பு இலவச பயிற்சி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மத்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் மூலிகை சோப்பு உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

26 நாட்கள் காலை 10:00 முதல் மதியம் 2:00 வரை பயிற்சி நடக்கிறது. இதில் மூலிகை, கிளிசரின், காஸ்டிக் சோடா கலந்த சோப்பு தயாரித்தல், சலவைத்துாள், பாத்திரம் துலக்கும் துாள், திரவம், பினாயில், ஹேண்ட்வாஷ், ஷாம்பூ, முக கிரீம், லிம் பாம், இயற்கை நறுமணப் பொருட்கள் தயாரிப்பதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். குறைந்தது 8வது தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். தொழில் துவங்குவதற்கான எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ், மாவட்ட தொழில் மையத்தின் குடிசைத்தொழில் சான்று, சோப்பின் தன்மை அறியும் ஆய்வக பரிசோதனை சான்று பெறவும்,

தொழில் துவங்குவதற்கான வங்கிக்கடன் பெற உதவி செய்யப்படும். அலைபேசி: 90950 54177.




    • Dinamalar Events


    Dinamalar