/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
5 ஆண்டு நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்
/
5 ஆண்டு நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்
5 ஆண்டு நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்
5 ஆண்டு நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்
ADDED : பிப் 02, 2024 12:25 AM

பேரையூர்: 'நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நல்ல நீதி கிடைக்க பணியாற்ற வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிசங்கர் பேசினார்.
பேரையூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் போதிய இடவசதியின்றி தனித்தனி நேரத்தில் செயல்பட்டன. இதனால் ரூ. 16.04 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம், நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டடங்கள் கட்ட பூமி பூஜை நடந்தது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முரளிசங்கர், கிருஷ்ணகுமார் அடிக்கல் நாட்டினர். நீதிபதி முரளிசங்கர் பேசுகையில், ''ஐந்து ஆண்டுகளுக்கு மேலுள்ள நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மதுரையில் நிலுவை வழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
நீதிபதி கிருஷ்ணகுமார் பேசுகையில், ''இளைய தலைமுறை வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் வழக்குகள் குறித்த நன்மைகளை பயிற்றுவிக்க வேண்டும். வரும் காலங்களில் அவர்கள் முன்னேற்றத்திற்கு இது வழிவகுக்கும். அதேபோல் இளைய தலைமுறை வழக்கறிஞர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும்'' என்றார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவகடாட்சம், குற்றவியல் நீதிபதி பசும்பொன் சண்முகையா மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், பேரையூர், திருமங்கலம், உசிலம்பட்டி நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

