/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
/
வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வழக்கு பதில் கோரும் உயர்நீதிமன்றம்
ADDED : செப் 19, 2025 02:47 AM
மதுரை: தமிழகத்தில் வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் உருவாக்க தாக்கலான வழக்கில் அரசு மற்றும் பார் கவுன்சில் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் (ஏ.பி.வி.எஸ்.,) செயற்குழு உறுப்பினர் சுசிகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் 2010 முதல் 2025 வரை 13 வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். சில வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. மதுரையில் செப்.4 ல் நடைபயிற்சி சென்ற வழக்கறிஞர் பகலவனை சிலர் தாக்கி கொலை செய்தனர். இது சட்ட அமைப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் மெட்டல் டிடெக்டர், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். போதிய பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகா, ராஜஸ்தானில் வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் உள்ளது. ஒருவர் வழக்கறிஞருக்கு எதிராக குற்றத்தில் ஈடுபட்டால் அச்சட்டப்படி சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் உருவாக்க தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுபாஷ்பாபு ஆஜரானார்.
தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர் லட்சுமண்,'சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழக சட்டத்துறை செயலர், இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலர்களை இந்நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்கிறது. அவர்கள் மற்றும் தலைமைச் செயலர், உள்துறை செயலர் அக்.17 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். சட்டமுன்வரவு நகலை மனுதாரர் தரப்பிற்கு பார் கவுன்சில் வழங்க வேண்டும் என்றனர்.

