/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்களை ஏளனமாக பேசுவது அமைச்சர்களின் வாடிக்கையாகிவிட்டது
/
மக்களை ஏளனமாக பேசுவது அமைச்சர்களின் வாடிக்கையாகிவிட்டது
மக்களை ஏளனமாக பேசுவது அமைச்சர்களின் வாடிக்கையாகிவிட்டது
மக்களை ஏளனமாக பேசுவது அமைச்சர்களின் வாடிக்கையாகிவிட்டது
ADDED : ஜன 14, 2024 04:04 AM
திருநகர், : அ.தி.மு.க., திருப்பரங்குன்றம் வடக்கு பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநகரில் நடந்தது. செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., பேசியதாவது: தி.மு.க. அரசு மக்களிடம் மதிப்பிழந்து விட்டது. முதல்வர் ஸ்டாலினிடம் நிர்வாக திறமை இல்லை. தி.மு.க., ஆட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர். அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. அனைத்து துறைகளிலும் போராட்டம் நடக்கிறது. அரசு தோல்வி அடைந்து விட்டது. மக்களை அமைச்சர்கள் ஏளனமாக பேசுவது வாடிக்கையாகிவிட்டது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு. மதுரையில் ரூ.115 கோடியில் கட்டப்பட்ட கருணாநிதி நுாலகம் காட்சிப் பொருளாக மட்டும் தான் உள்ளது என்றார்.
நிர்வாகிகள் பாலமுகேசன், முருகேசன், மகாராஜன், ராஜ்குமார், பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.

