ADDED : ஜன 14, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் நாளை (ஜன.,15) ஜல்லிக்கட்டு நடக்கிறது.
அதற்காக வாடிவாசல், பார்வையாளர் மேடை உள்பட 30 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. மாநகராட்சி துணை கமிஷனர் தயாநிதி, நகர்புற வளர்ச்சி திட்டமிடல் செயற்பொறியாளர் மாலதி ஆய்வு செய்தனர். 5 நடமாடும் கழிப்பறைகள், 18 குடிநீர் தொட்டிகள், இரண்டு இடங்களில் எல்.இ.டி., திரைகள், காளைகளுக்கு புல் தீவனம், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

