/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்காதீங்க கிடைக்காது; பயணிகளிடம் கலகலப்பாக பேசிய விமானி

ADDED : ஜூன் 15, 2025 05:32 AM

அவனியாபுரம் : மதுரை-அபுதாபி விமானத்தின் விமானி பயணிகளிடம், நம்ம ஊரு பிளைட்ல ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்காதீங்க கிடைக்காது என கலகலப்பாக பேசினார்.
மதுரையில் இருந்து அபுதாபிக்கு நேற்று முன்தினம் முதல் நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் துவக்கியது. அந்த விமானத்தின் விமானிகள் மதுரை இம்மானுவேல், அஸ்வதாமன்.
விமானம் புறப்படுவதற்கு முன் விமானி, பயணிகளிடம் மதுரையிலிருந்து அபுதாபி 3000 கி.மீ. தொலைவில் உள்ளது. நான்கு மணி நேரத்தில் அபுதாபிக்கு சென்று விடுவோம். பயணத்தின்போது தயவுசெய்து சந்தோஷமாக இருங்கள்.
நம்ம ஊரு பிளைட் என்பதால் ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்காதீர்கள் கிடைக்காது. உங்களுக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் கேபின் குழுவை அழையுங்கள். நன்றி வணக்கம் என்று கூறினார்.
விமானியின் பேச்சைக் கேட்டு கைதட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்திய பயணிகளில் ஒருவர் அபுதாபிக்கு மதுரையிலிருந்து முதல் விமானத்தை மதுரையைச் சேர்ந்த நீங்கள் இயக்குவது எங்களுக்கு பெருமையாகவும், கவுரவமாகவும் உள்ளது என்றார்.