ADDED : ஜன 21, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளியை தரம் உயர்த்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி என்ற பூரணம்மாளுக்கு அவர் பணியாற்றும் தல்லாகுளம் கனரா வங்கி கிளையில் பாராட்டு விழா நடந்தது.
கனரா வங்கி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் சோமநாதன், பாலசுப்ரமணியன், வெங்கட்ராமன், ராமன், கண்ணம்மாள் ஆகியோர் கவுரவித்தனர்.

