/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி கோயிலுக்கு பூட்டு பா.ஜ.,வினர் வாக்குவாதம்
/
மீனாட்சி கோயிலுக்கு பூட்டு பா.ஜ.,வினர் வாக்குவாதம்
மீனாட்சி கோயிலுக்கு பூட்டு பா.ஜ.,வினர் வாக்குவாதம்
மீனாட்சி கோயிலுக்கு பூட்டு பா.ஜ.,வினர் வாக்குவாதம்
ADDED : ஜன 23, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு நேற்று காலை திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பா.ஜ.,வினர் வந்தனர். கோயில் பூட்டப்பட்டிருந்ததால் முன்பக்க கதவை திறந்து விநாயகர் சிலை முன்பு அமர்ந்து கோஷமிட்டனர்.
கோயிலையொட்டி வீட்டில் ஒருவர் இறந்து விட்டதால் நடை சாத்தப்பட்டுள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று பா.ஜ.,வினர் வழிபட்டனர். நகர் தலைவர் விஜயேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத் தலைவர் சரவணன், செயலாளர்கள் தமிழ்மணி, சின்னசாமி கலந்து கொண்டனர்.