/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு மைதான திறப்பு விழா அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
/
ஜல்லிக்கட்டு மைதான திறப்பு விழா அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
ஜல்லிக்கட்டு மைதான திறப்பு விழா அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
ஜல்லிக்கட்டு மைதான திறப்பு விழா அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
ADDED : ஜன 23, 2024 04:52 AM
மதுரை: அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கக ரூ.45 கோடி செலவில் கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல்அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (ஜன.24) காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதையொட்டி முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் பேசுகையில், ''ஜல்லிக்கட்டு அரங்கத்தில் காளைகள், வீரர்கள், பொதுமக்கள், வி.ஐ.பி.,க்களுக்கு என தனித்தனியே போதிய பாதுகாப்பு தடுப்புகளை உறுதித்தன்மையுடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பார்வையாளர்களுக்கு திருவிழாவை காணவரும் அளவுக்கான மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் சிரமமின்றி பார்வையாளர் மாடத்திற்கு செல்லும் வகையில் இருக்க வேண்டும்'' என்றார்.
இக்கூட்டத்தில் ஐ.ஜி., நரேந்திரன்நாயர், டி.ஐ.ஜி., ரம்யாபாரதி, எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே, கூடுதல் கலெக்டர் மோனிகாராணா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.

