/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க.,வுக்கு பெண்கள் ஆதரவு அதிகம் அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
/
தி.மு.க.,வுக்கு பெண்கள் ஆதரவு அதிகம் அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
தி.மு.க.,வுக்கு பெண்கள் ஆதரவு அதிகம் அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
தி.மு.க.,வுக்கு பெண்கள் ஆதரவு அதிகம் அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
ADDED : ஜூன் 25, 2025 08:36 AM
திருமங்கலம், : கள்ளிக்குடி தாலுகா செங்கப்படையில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். அமைச்சர் மூர்த்தி நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது: தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் அரசு பெண்களுக்கு மாதம்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறது. கல்லுாரியில் மாணவர்களுக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. மதுரை சுய உதவி குழுவிற்கான கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெண்களின் ஆதரவு தி.மு.க.,விற்கு உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதிமூலம், சிவமுருகன், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார், சண்முகம், திருமங்கலம் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.