/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜன.24ல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 9 ஆயிரம் காளைகள் பதிவு திறப்பு விழாவில் களம்காண 3300 வீரர்களும் பதிவு

ADDED : ஜன 21, 2024 03:48 AM
மதுரை: மதுரை மாவட்டம் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நுாற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜன.24ல் திறந்து வைக்கிறார். அன்று இம்மைதானத்தில் களம்காண 9 ஆயிரம் காளைகள், 3300 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
அலங்காநல்லுார் அருகே ரூ.45 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவையொட்டி ஜன.24ல் முதல்வர் ஸ்டாலின் முன்னி லையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. அன்று முதல் ஜன.28 வரை 5 நாட்கள் போட்டிகள் நடக்கும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்து இருந்தார்.
ஆனால் தற்போது திறப்பு விழா நாளான ஜன.24 அன்று ஒருநாள் மட்டுமே போட்டி நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் காளைகள், வீரரகள் பதிவு ஆன்லைனில் துவங்கியது. ஜன.19 மதியம் துவங்கி ஜன.20 மதியம் வரை நடந்த இப்பதிவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
3300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
இத்தனை பேர் பதிவு செய்தாலும் ஆயிரம் முதல் 1200 காளைகள் வரையே போட்டியில் பங்கேற்கும். அதற்கேற்ப இரட்டைப்பதிவு, வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் ஒரே குடும்பத்தில் பல பெயர்களில் பதிவு போன்றவை உட்பட அனைத்து மனுக்களையும் பரிசீலித்து தகுதியானவற்றுக்கு அனுமதி வழங்க உள்ளனர்.
அதேபோல வீரர்களும் 10 முதல் 12 சுற்றுக்களில் 500 முதல் 600 பேர் வரை களமிறங்கலாம் எனக்கூறப்படுகிறது.
போட்டிகளும் தொடர்ந்து 5 நாட்களாக நடத்தாமல், வாரம் ஒருமுறை சனி, ஞாயிறுகளில் நடத்தலாமா என்ற ஆலோசனையும் நடந்துள்ளது. இதனால் தற்போதைய பதிவு முதல்வர் வரும் நாளில் மட்டும் களமிறங்கும் காளைகள், வீரர்களுக்கானது என்கின்றனர்.