/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
/
சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு ஓவிய போட்டி
ADDED : ஜன 24, 2024 06:12 AM

மதுரை, : மதுரை நரிமேடு கே.வி., பள்ளியில் பிரதமர் மோடியின் 'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தக கருப்பொருள் அடிப்படையில் (பரிக்ஷா பே சர்ச்சா 2024) சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவிய போட்டிகள் நடந்தன.
முதல்வர் மனோஜ் குமார் பாலிவால் தலைமை வகித்து ஓவியப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். கேந்திரிய வித்யாலயா உட்பட 16 சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். லேடி டோக் கல்லுாரி உதவிப் பேராசிரியை லிசி காருண்யா, தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியை சிவதுர்கா, ஓவிய ஆசிரியர் சுப்பையா ஆகியோர் மாணவர்களின் ஓவியங்களை மதிப்பீடு செய்தனர். முதல் சிறந்த ஐந்து ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு அதை வரைந்த மாணவர்கள் இனியா ஈஸ்வரி, ஜீவா பாலன், ரித்திஷ், ராஜ்சுந்தர், தனலட்சுமி ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் முருகன் நன்றி கூறினார்.

