/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோடு விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறான அரசியல்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவலை
/
ரோடு விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறான அரசியல்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவலை
ரோடு விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறான அரசியல்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவலை
ரோடு விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறான அரசியல்; நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவலை
ADDED : ஜன 10, 2024 06:38 AM
மதுரை : மதுரையில் விரிவாக்கம் நடைபெறும் ரோடுகளில் அரசியல் செல்வாக்குள்ளோரால் நெடுஞ்சாலைத்துறை பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.
சில ஆண்டுகளாகவே வாகன பெருக்கத்தால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் செல்வாக்குள்ளோர் மீண்டும் ஆக்கிரமித்து வருகின்றனர். மதுரை - ஒத்தக்கடை ரோடு சமீபத்தில் விரிவுபடுத்தி தற்போது எளிதான போக்குவரத்து நடக்கிறது.
இதேபோல சிவகங்கை, தேனி, நத்தம் ரோடுகளில் மேம்பாலம் வருகின்றன. அழகர் கோவில் ரோடும் சிலமாதங்களுக்கு முன் விரிவுபடுத்தப்பட்டுவிட்டது. திருநகர் ரோடு விரிவாக்கப் பணிகள் 6கி.மீ., நீளத்திற்கு ரூ.40 கோடியில் 3 கட்டங்களாக நடக்க உள்ளது.
ரோட்டை அகலப்படுத்தி மீடியன், வடிகால் வசதி ஏற்படுத்த உள்ளனர். இதற்காக ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ரோட்டோரம் உள்ள சில ஓட்டல்கள் அரசியல் பின்புலத்தை காட்டி ஒத்துழைக்க மறுப்பதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சில கடைகள், வீடுகளில் ஆட்கள் வெளியூரில் உள்ளனர் என்று கூறி தாமதப்படுத்துகின்றனர்.
இதேபோல காளவாசல் முதல் பழங்கா நத்தம் வரையான பைபாஸ் ரோடு அதிக ஆக்கிரமிப்பில் உள்ளது. சமீபத்தில் இந்த ரோட்டில் இருந்த கடைகளை நெடுஞ்சாலை, மாநகராட்சியினர் அகற்றினர். சிலநாட்களிலேயே சிற்றுண்டி கடைகள் பெட்டிக் கடைபோல முளைத்துவிட்டன. இதற்கு ஆளும்கட்சி கவுன்சிலர்களே ஆதரவாக உள்ளனர். அக்கடையை காரணம்காட்டி சில தள்ளுவண்டி, சைக்கிள் வியாபாரம் என ரோட்டோரம் கடைகள் களைகட்டி வருகிறது.
வில்லாபுரத்திலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன.
அவனியாபுரத்தில் பைபாஸ் துவங்கும் பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் போட்டி போட்டுக் கொண்டு உயரமாக முளைத்துள்ளன.
இவற்றை இதோ... அகற்றிவிடுகிறோம் என நெடுஞ்சாலைத்துறை அடிக்கடி கூறுகின்றனரே தவிர அகற்றமுடியவில்லை. இதனை அப்புறப்படுத்துவதிலும் 'அரசியல்' குறுக்கிடுவதால் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது.

