sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் பொங்கல் விழா கோலாகலம்

/

மதுரையில் பொங்கல் விழா கோலாகலம்

மதுரையில் பொங்கல் விழா கோலாகலம்

மதுரையில் பொங்கல் விழா கோலாகலம்


ADDED : ஜன 14, 2024 03:44 AM

Google News

ADDED : ஜன 14, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை 'மதுரையில் பள்ளி, கல்லுாரி, அமைப்புகள், நிறுவனங்கள் சார்பில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் சூரியபிரபா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் மாணவர்களுடன் பொங்கல் வைத்தனர். கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பரவை மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். தாளாளர் சக்திபிரனேஷ் முன்னிலை வகித்தார். உறிஅடித்தல், கயிறு இழுத்தல், சைக்கிள் ஓட்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முதல்வர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் வினோத், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை பழங்காநத்தம் நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை மீனாட்சி தலைமை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு கவுன்சிலர் சுதன் பரிசு வழங்கினார். செந்தமிழ்க் கல்லுாரி முன்னாள் முதல்வர் சின்னப்பா, புலவர் சங்கரலிங்கம் பங்கேற்றனர். ஆசிரியை ஏஞ்சலின் பிரேமலதா நன்றி கூறினார். மதுரை காமராஜ் பல்கலையில் பொருளியல் புலம் சார்பில் சிண்டிகேட் உறுப்பினர் புஷ்பராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேராசிரியர் சதாசிவம் முன்னிலை வகித்தார். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி ஏற்பாடு செய்தார்.

ஒத்தக்கடை அரசு தொடக்க பள்ளியில் ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மாலா, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் செய்தனர். கீரைத்துறை மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலை பள்ளியில் தலைவர் பிச்சைப்பாண்டியன், செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் ராஜாராம், ஜெயசிங், பொருளாளர் தாமரைச் செல்வன், தலைமையாசிரியை சரஸ்வதி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியைகள் பொங்கலிட்டனர். ஆசிரியைகள் சித்ரா தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் ராஜவடிவேல், சுகுமாறன் ஏற்பாடு செய்தனர். ஊமச்சிகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் திவ்யநாதன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சித்ரா, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், வன அலுவலர் தருண்குமார், ஆசிரியர்கள் ராணி, சரவணன், கண்ணன், பாண்டியராஜன், முரளிதரன், ராமநாதன், கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு நடந்த போட்டியில் மதுபாலா, ஜெயசித்ரா, கனிமொழி வெற்றி பெற்றனர். ஆசிரியைகள் தமிழ்ச்செல்வி, மீனாள் சகாயமேரி, மாணிக்கவல்லி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மாநகராட்சி


மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் மதுபாலன் தலைமையில் கொண்டாடப்பட்டது. விளையாட்டு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை கமிஷனர் சரவணன், மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கண்காணிப்பு பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத்குமார், உதவி கமிஷனர் சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காந்தி மியூசியத்தில் செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், ஆளுமை மேம்பாட்டு பயிற்சியாளர் ஷீலா, பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோலம் வரைதல், பாரம்பரிய பொங்கல் குறித்து விளக்கப்பட்டது. கரும்பு பரிசாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மதுரை கோட்டம், பேர்ட் டிரஸ்ட், பி.டி காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பி.டி.காலனியில் கொண்டாடப்பட்டது. வாரிய சமுதாய அலுவலர் பூமிகா, டிரஸ்ட் இயக்குநர் ராஜ்குமார், சங்கத்தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு அண்ணாநகர் போலீஸ்உதவி கமிஷனர் சூரக்குமரன் பரிசு வழங்கினார். இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பாண்டியராஜா, டாக்டர் சதீஷ்கண்ணா, இன்ஸ்பெக்டர் தாமரைவிஷ்ணு, ப்ளூ பவுண்டேஷன் டிரஸ்டி மாலதி கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் பொன்னுச்சாமி நன்றி கூறினார்.

போலீசார் பொங்கல் விழா


மதுரை நகர் காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா நடந்தது. போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமை வகித்தார். கோலம், கயிறு இழுத்தல், பானை உறியடித்தல், இசை நாற்காலி, மியூசிக் கார்னர் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு காவலர் நல நிதியிலிருந்து பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சங்கீதா, போலீஸ் துணைக் கமிஷனர்கள் மங்களேஸ்வரன், பாலாஜி, அனிதா, குமார் பங்கேற்றனர்.

வாடிப்பட்டி


புஸ்கோஸ் மெட்ரிக் பள்ளியில் விழாவை ஆரோக்கிய அன்னை சர்ச் நிர்வாக தந்தை ஆண்டனி வினோ துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ரோனிக்கா சந்திரா முன்னிலை வகித்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு தாளாளர் ராஜம், நிர்வாகி அனிதா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். பாண்டியராஜபுரம் அரசு சர்க்கரை ஆலை பள்ளியில் முன்னாள் மாணவர் கழகம் சார்பில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் லட்சர்கான், தலைவர் கண்ணன், துணைத் தலைவர்கள் செந்தாமரை, பரணி ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ராஜசேகரன், சிவக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொதுச் செயலாளர் ராமராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

திருப்பரங்குன்றம்


சவுராஷ்டிரா கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை சார்பில் கொண்டாடப்பட்டது. செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ்வரன், ராமசுப்ரமணியன், முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் பாலாஜி வரவேற்றார். சுயதிநிப் பிரிவு இயக்குநர் ராமலிங்கம், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சீனிவாசன், உள்தர மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் கலந்து கொண்டனர். தென் கொரிய நாட்டினர். பேராசிரியர்கள் அன்பழகன், ஜீவப்பிரியா, ராஜா சபரீஷ் பாபு, வினோத் நாகராஜன் ஏற்பாடுகள் செய்தனர்.

எழுமலை


மல்லப்புரம் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்களில் நிறுவனர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராமராஜ், சுப்பிரமணி, பெருமாள், சென்னக்கிருஷ்ணன், லோகநாதன், செல்வராஜ், நிர்வாக அலுவலர் சந்திரன், கல்வியியல் கல்லுாரி முதல்வர் கருப்பசாமி, பாலிடெக்னிக் முதல்வர் சுபாராஜன், கலை அறிவியல் மகளிர் கல்லுாரி முதல்வர் செல்வக்குமாரி, மெட்ரிக் பள்ளி முதல்வர் தனபாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விக்கிரமங்கலம்


செல்லம்பட்டி ஒன்றியம் நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் பயிற்றுநர் புனிதா தலைமை வகித்தார். கிராம முதன்மைக்காரர் வேலுச்சாமி, ஊராட்சித் தலைவர் திருப்பதி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் சின்னச்சாமி செய்திருந்தார். அலங்காநல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை பொய்கை முன்னிலை வகித்தார்.

உசிலம்பட்டி


ஆச்சி இண்டர்நேஷனல் பள்ளியில் தாளாளர் காசிமாயன், முதல்வர் பாஸ்டின்குமார், ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் கலந்துகொண்டனர். முளைப்பாரி, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். --------

திருமங்கலம்


நகராட்சியில் தலைவர் ரம்யா, துணைத் தலைவர் ஆதவன், பொறியாளர் ரத்தினவேலு, நகர் செயலாளர் ஸ்ரீதர், கவுன்சிலர்கள் வீரக்குமார் திருக்குமார், ரவி, ரம்ஜான் பேகம், முத்து காமாட்சி, முருகன் வினோத் குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

-----அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரியில் தாளாளர் எம்.எஸ்.ஷா தலைமை வகித்தார். பொருளாளர் சகிலா முன்னிலை வகித்தார். முதல்வர் அப்துல் காதிர், பேராசிரியர்கள் விக்னேஸ்வர சீமாட்டி அன்புச்செல்வி, ராஜ்குமார், உடற் கல்வி இயக்குனர்கள் செந்தில் குமார், நாராயண பிரபு மற்றும் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us