ADDED : ஜன 23, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: தேனுாரில் அழகர்கோவிலுக்கு நெல் கோட்டை கட்டும் விழா நடந்தது.
இப்பகுதி விவசாயிகள் தை வளர் பிறையில் அறுவடை செய்யும் முதல் நெல்லை ஆண்டுதோறும் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு நன்றி கடனாக படைத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு விவசாயி சோணைமுத்து நிலத்தில் பாரம்பரிய முறைப்படி நெற்கதிரை கையால் அறுவடை செய்து கதிரடித்து திரித்த வைக்கோல் கயிற்றில் நெல்லை கோட்டை கட்டி அழகு மலையான் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.
சிறப்பு தீபாரதனை நடந்தது. பின் நெல் கோட்டையை விவசாயிகள் அளவுகளில் ஒப்படைத்தனர்.

