ADDED : செப் 26, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி கீழப்புதுார் சந்தனமாரியம்மன் கோயில் தெரு வழியாக ஊருணி மேட்டுத்தெரு பகுதிக்குச் செல்ல பொதுமக்கள் கால்வாய் பாதையை பயன்படுத்தி வந்தனர்.
இப்பாதை பட்டா இடத்தில் உள்ளது எனக்கூறி சிலர் தடுப்பு அமைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதையை மீட்டுத்தரவும்கோரி அப்பகுதி மக்கள் மதுரை ரோட்டில் 20 நிமிடங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது.
போலீசார், நகராட்சி, வருவாய்த்துறை அலுவலர்கள் மறு அளவீடு செய்து பாதையை மீட்டெடுத்து தருகிறோம் என உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.