/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டம்: மதுரையில் ரவுடிகள் கைது
/
பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டம்: மதுரையில் ரவுடிகள் கைது
பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டம்: மதுரையில் ரவுடிகள் கைது
பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டம்: மதுரையில் ரவுடிகள் கைது
UPDATED : மார் 26, 2025 06:26 AM
ADDED : மார் 26, 2025 03:44 AM

மதுரை : மதுரை நகரில் 'யார் பெரிசு' என்ற தகராறில் சூர்யா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பழிக்குப்பழி வாங்க வாள்களுடன் சுற்றிதிரிந்த 2 ரவுடிகள் மற்றும் வழிப்பறி செய்யும் நோக்கில் சுற்றி வந்த 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதி ஜீவா நகரைச் சேர்ந்தவர் சூர்யா 23. இவரது தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் ஏரியாவில் யார் பெரிசு என்ற 'ஈகோ' இருந்தது.
கடந்தாண்டு 'யார் பெரிய ஆள் மோதிப்பார்க்கலாம்' என இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட சூர்யாவை கடந்த செப்.,ல் ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இக்கொலைக்கு பழிக்குப்பழி வாங்க சூர்யா நண்பர்கள் நோட்டமிட்டு வந்தனர். இதை அறிந்த எதிர் தரப்பினரும் முன்னெச்சரிக்கையாக ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர். நேற்றுமுன்தினம் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் போலீசார் சந்தேகத்தின்பேரில் ஜீவா நகர் அட்டகார்த்திக்கை 19, விசாரித்தபோது பெரிய வாள் வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், சூர்யா கொலை வழக்கில் 4 மாதம் சிறையில் இருந்த அட்டகார்த்திக், ஜாமினில் வெளிவந்தபின் ராஜபாளையம் பகுதியில் தஞ்சம் புகுந்தார்.பின்னர் வழக்கு விசாரணைக்காக மதுரை வந்தபோது அவரை சூர்யா நண்பர்கள் சரவணபாண்டி, தேன்ராஜ் பாண்டி, தீபக், வெற்றிவேல், சதீஷ், விஷ்ணுகுமார், கார்த்திக் பிரியன் ஆகியோரால் உயிருக்கு ஆபத்து என உணர்ந்து வாளுடன் அட்ட கார்த்திக் வலம் வந்துள்ளார். அவரை கைது செய்தனர்.
அதேபோல் சூர்யா கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்து வாளுடன் சுற்றித் திரிந்த திடீர்நகர் ரஹ்மான்ஹானையும் 29,போலீசார் கைது செய்தனர்.தவிர, நகரில் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு பணம் பறிக்கும் நோக்கில் வாளுடன் வலம் வந்த ரவுடிகள் தினேஷ்வரன் 23, ராம்குமார் 36, மகாராஜன் 25, ராஜ்குமார் 23, கரண் 24, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.