பாராட்டு விழா
மதுரை: புதுார் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் ஆய்வு மையம் சார்பில் 'தமிழ் ஒளி' விருது பெற்ற மதுரை வாசகர் வட்டத் தலைவர் சண்முகவேலுவிற்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஷேக் நபி தலைமை வகித்தார். தமிழியக்க மாவட்டச் செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் முத்துமணி வரவேற்றார். தமிழியக்கம் பொருளாளர் மாரியப்பன், வாசகர் வட்ட நிர்வாகி ராமமூர்த்தி, அனைத்துத் துறை ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், கவிஞர்கள் மூரா, ரவி, எழுத்தாளர்கள் பரமசிவம், மெகபூப்ஜான், உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரகமத்துல்லா பங்கேற்றனர். தமிழியக்க பொறுப்பாளர்கள் பிரான்சிஸ், அபுதாஹிர் ஏற்பாடு செய்தனர்.
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
மதுரை: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கல்லுாரி தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. முதல்வர் (பொறுப்பு) கவிதா வரவேற்றார். இணை செயலாளர் பாலகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெற்றோருடன் கலந்துரையாடல் நடந்தது. கேள்விகளுக்கு பாலகுரு பதில் அளித்தார். கணிதத்துறை தலைவர் கற்பகம் நன்றி கூறினார்.

