ADDED : பிப் 02, 2024 06:11 AM
சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிப்பு பயிற்சி
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். முதல்வர் ராமசுப்பையா, இயக்குநர் பிரபு, பேராசிரியர் அழகேசன் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் கோபிமணிவண்ணன் வரவேற்றார். கோவை ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் லதாராஜா பயிற்சி அளித்தார். மாணவி பவித்ரா நன்றி கூறினார். பேராசிரியர்கள் சரஸ்வதி, கவிதா, அனிதாஸ்ரீ, உமாமகேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
கல்வி உதவித்தொகை வழங்கல்
திருப்பரங்குன்றம்: மதுரை சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் நடந்தது. டிரஸ்ட் நிறுவனர் குப்புசாமி, 40 மாணவியருக்கான ரூ.1.14 லட்சத்தை தாளாளர் குமரேஷிடம் வழங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், டிரஸ்ட் நிர்வாக உறுப்பினர் கவிதா, கல்லுாரி முதல்வர் ரவீந்திரன், மகளிர் கல்லுாரி முதல்வர் மவுஷ்மி கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு சைக்கிள்
உசிலம்பட்டி: ஆர்.சி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் பானு, தலைமை ஆசிரியை மெர்சி முன்னிலையில் தி.மு.க., வடக்கு ஒன்றியச்செயலாளர் அஜித்பாண்டி 155 பேருக்கு வழங்கினார்.
வணிகவியல் திருவிழா
திருமங்கலம்: பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் திருவிழா நடந்தது. பிற கல்லுாரிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். முதல்வர் கணேசன் வரவேற்றார். மதுரை கல்லுாரி வணிகவியல் துறை உதவி விரிவுரையாளர் மயில்முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வினாடி வினா, நடனம், கழிவு பொருட்களில் இருந்து கலை பொருட்களை உருவாக்குதல் போன்ற போட்டிகள் நடந்தன. இதில் தியாகராஜர் கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பிடித்து சுழற்கோப்பையை வென்றனர். வணிகவியல் துறை தலைவர் தாமரைச்செல்வி நன்றி கூறினார்.
சிறுகதை திறனாய்வு சொற்பொழிவு
மதுரை: செந்தமிழ்க் கல்லுாரி, பெண்கள் வழிகாட்டுதல் மையம், பாண்டியன் நுாலக வாசகர் வட்டம் சார்பில்சிறுகதைத் திறனாய்வு, சிறப்புச் சொற்பொழிவு நடந்தது. முதல்வர் சாந்திதேவி தலைமை வகித்தார். மாணவி சினேகா வரவேற்றார். உதவி பேராசிரியர் செந்தில்குமார் அறிமுகம் செய்தார். மாணவி வினிதா புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் என்ற சிறுகதையை திறனாய்வு செய்தார். கவிஞர் கவிதா சோதனைகளைச் சாதனையாக்குவோம் என்ற தலைப்பில் பேசினார். மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
சிறப்பு கருத்தரங்கு
ஊமச்சிக்குளம்: சின்னப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க் கூடல் சிறப்பு கருத்தரங்கம் தலைமை ஆசிரியர் ஜோதி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. எழுத்தாளர் ராம் காவேரி இனிய தமிழ் எனும் தலைப்பில் பேசினார். சிறப்பு விருந்தினரான காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் தேவதாஸ் காந்தியடிகளின் தமிழ் பற்று எனும் தலைப்பில் பேசினார். மாணவ மாணவிகள் கதைகள் கூறினர். பாடல் பாடினர். ஆசிரியர் குமரேசன் நன்றி கூறினார். ஆசிரியர் ஜெயக்குமரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

