ADDED : ஜூலை 04, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: வல்லாளபட்டியை சேர்ந்த 19 வயது பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
வேலைக்கு செல்லும் போது அதே ஊரைச் சேர்ந்த தீபன் ராஜூவுடன் 25, ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர். அதேநேரம் தீபன் ராஜூவின் நண்பர்கள் சுகுமாறன் 24, மதன் 25, ஆகியோர் சென்றனர். அவர்களும் அப்பெண்ணை தொந்தரவு செய்தனர். இத்தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே போலீசில் புகார் கொடுத்தனர். மூவரையும் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

