/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
50 சதவீத மானியத்தில் சிறுதானிய விதைகள்
/
50 சதவீத மானியத்தில் சிறுதானிய விதைகள்
ADDED : ஜன 10, 2024 06:43 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வேளாண் வரிவாக்க மையத்திற்குட்பட்ட பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது.
அறுவடைக்கு பின்பு குறுகிய கால பயிர்களான பயறு வகைகள் மற்றும் சிறுதானிய வகைகள் சாகுபடி செய்து விவசாயிகள் குறுகிய கால வருமானம் ஈட்டலாம்.
இதற்காக தனியாக நீர், உரச்செலவுகள் இல்லை. ஏற்கனவே நெல் பயிரிட்டுள்ள நிலங்களில் உள்ள நீர் சத்து, உரச்சத்துக்கள் போதுமானது. இதன் மூலம் விவசாயிகள் சொந்த தேவைக்கான பயறு வகைகள், சிறு தானியங்களை பெறுவதுடன் உபரியை விற்று கூடுதல் வருமானம் ஈட்டலாம்.
மேலும் மானாவாரி கண்மாய் பகுதிகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர். அங்கும் சிறுதானியங்கள், பயறு வகைகளை சாகுபடி செய்து பயன்பெறலாம். இதற்காக உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சிறுதானிய விதைகள் திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மையத்தில் போதுமான அளவு இருப்பு உள்ளது. 50 சதவீத மானியத்தில் பெறலாம்.
விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குநர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.

