நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : உசிலம்பட்டி தாலுகா அரசமரத்துப்பட்டி முத்துராமன். இவரது மனைவி ஆனந்தாயி 40. மகன் முனீஸ்வரன் 18. இவர்கள் கரும்பு வெட்டும் தொழிலாளிகள்.
தாயும் மகனும் கரும்பு வெட்ட டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) ராஜபாளையம் செல்வதற்காக டி.கல்லுப்பட்டியை அடுத்த பாரைப்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் முனீஸ்வரன் இறந்தார். ஆனந்தாயி காயமுற்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

