/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரி மாணவருக்கு பேச்சுப்போட்டிகள்
/
கல்லுாரி மாணவருக்கு பேச்சுப்போட்டிகள்
ADDED : மார் 26, 2025 03:49 AM
மதுரை : மதுரையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிள் நடந்தன.
திருப்பாலை யாதவர் மகளிர் கல்லுாரியில் நடந்த போட்டியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பங்கேற்றார். மாவட்ட பற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் முத்துக்கிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தமிழில் ஒன்றே குலம் ஒருவனே தேவன், மனிதநேயம் ஓங்கட்டும், மதவெறி நீங்கட்டும் என்பது உட்பட 10 தலைப்புகளில் பேச 60 பேர் பங்கேற்றனர்.
இதேபோல ஆங்கில தலைப்புகளிலும் பேசுவதற்கு பலர் வந்திருந்தனர். நிஷா காருண்யா, பிருந்தா இவான்சலின், மோசஸ் நடுவர்களாக பணியாற்றினர்.
இவர்களில் தமிழ் பேச்சுப் போட்டியில் முறையே, மதுரை கல்லுாரியின் ஹரிஹரன், யாதவா கல்லுாரியின் ஜனனி கோபிகா, பாத்திமா கல்லுாரியின் வர்ஷினி, மாற்றுத் திறனாளிகள் தரப்பில் அல்ட்ரா கல்லுாரியின் நிவேதா முதல் 4 பரிசுகளை பெற்றனர்.
ஆங்கில பேச்சுப் போட்டியில் யாதவர் மகளிர் கல்லுாரியின் ஜெயஸ்ரீ, அல்ட்ரா கல்லுாரியின் ஜூகேஷா, அதே கல்லுாரியின் மரகத நிஷா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றனர். வென்ற மாணவர்களுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்க உள்ளார்.