நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லுாரி வந்தனர்.
கல்லுாரி அருகிலுள்ள மலையாளத்தான் பட்டி விவசாயிகளிடம் விவசாய திட்டங்களை விளக்கினர். கிராம பருவ கால அட்டவணை, வரைபடம், தினசரி வேலை அட்டவணை, செலவு விவரம், தேசிய தடுப்பூசி அட்டவணை, பயிரிடும் முறை, சமூக நிலை வரைபடத்தை விளக்கினர். மாணவிகள் ஆர்த்தி, ஆஷிகா, ஆசினி, அபிநயா, அனீஸ் பாத்திமா, தீபா செல்வி, தேவநந்திதா, தேவகி, தனலட்சுமி, தனஸ்ரீ, தாரணி, தர்ஷனா, திவ்யதர்ஷினி ஒருங்கிணைத்தனர். ஊரக வேளாண் பணி அனுபவ ஒருங்கிணைப்பாளர் நிர்மலா, பேராசிரியைகள் ஜோனா இன்னிசை ராணி, ஆவுடைத்தாய் ஒருங்கிணைத்தனர்.