/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்து மாணவர்கள் காயம்
/
அரசு பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்து மாணவர்கள் காயம்
அரசு பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்து மாணவர்கள் காயம்
அரசு பஸ் படிக்கட்டு உடைந்து விழுந்து மாணவர்கள் காயம்
ADDED : செப் 19, 2025 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தில் இருந்து விமான நிலைய ரோடு வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு 37 எண் மகளிருக்கான இலவச பஸ் நேற்று மாலை 5:30 மணிக்கு சென்று கொண்டிருந்தது.
திருமங்கலம் ரயில்வே கேட் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க படிக்கட்டு உடைந்து விழுந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணித்த 3 மாணவர்கள் கீழே விழுந்தனர். பேருந்து மிகமெதுவாக சென்றதால் மாணவர்கள் சிறிய காயங்களோடு தப்பினர். பஸ் நிறுத்தப்பட்டு, அதில் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவர்கள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.