நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.குன்னத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடந்தது. தலைமையாசிரியை மீனாட்சிசுந்தரி தலைமை வகித்தார்.
மாணவ மாணவிகள் கதை, கட்டுரை, கவிதை, பேச்சுப்போட்டி, கும்மி, கோலாட்டம், நாடகங்கள், மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் சுலோச்சனா, கணேசன், சண்முகசுந்தரம் ஏற்பாடுகளை செய்தனர். மேலாண்மை குழு நிர்வாகி விஜயபாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி நாராயணசாமி கலந்து கொண்டனர்.

