sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

700 ஆண்டுகள் முன்பே தீர்மானிக்கப்பட்டது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி

/

700 ஆண்டுகள் முன்பே தீர்மானிக்கப்பட்டது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி

700 ஆண்டுகள் முன்பே தீர்மானிக்கப்பட்டது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி

700 ஆண்டுகள் முன்பே தீர்மானிக்கப்பட்டது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி


ADDED : ஜன 21, 2024 02:24 AM

Google News

ADDED : ஜன 21, 2024 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி, 700 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பது சமஸ்கிருத பாடல் ஒன்றை ஆராய்ச்சி செய்த போது தெரிய வந்துள்ளது,'' என, வேத சாஸ்திர மற்றும் கணித ஆராய்ச்சியாளர் முனைவர் என்.கண்ணன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலையில் வேத- கலாசார துறைத் தலைவராகவும், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி கணித பேராசிரியராகவும் பணியாற்றியவர். சமஸ்கிருதத்திலும், வேத சாஸ்திரங்களிலும், கணிதத்திலும் பல ஆராய்ச்சிகள் செய்தவர் கண்ணன்.

ஹிந்து தத்துவ ஞானி வேதாந்த மகா தேசிகர் படைத்த 'ரகுவீர கத்யம்' என்னும் புகழ்மிக்க சமஸ்கிருத காவியத்தின் பாடலை இவர் ஆராய்ந்த போது, அதனுள் புதைந்திருந்த நுட்பமான செய்திகளை தற்போது வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் 2024ம் ஆண்டு கட்டப்படும் என 700 ஆண்டுகளுக்கு முன்பே வேதாந்த தேசிகர் சூட்சுமமாக குறிப்பிட்டிருந்ததாக கூறுகிறார்.

அவர் கூறியதாவது:

இந்தியாவின் பண்டைய இலக்கியங்கள் கணித ஞானத்தின் புதையலாக விளங்குகின்றன. பழங்கால அறிஞர்கள் அனைத்து துறைகளின் அறிவையும் பெற்றிருந்தனர்.

அதனால் கணிதம், தத்துவம், வேதங்கள் , புராணங்கள், ஆகமங்கள், இசை, ஓவியம், ஜோதிடம் முதலியவற்றை ஒருங்கிணைத்து பாடல் வடிவில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த அவர்களால் முடிந்தது. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் 13ம் நுாற்றாண்டின் கவிஞரான தேசிகர்.

வேத எண் குறியீடுமுறை


இவர் தன் கணித முறைகளை தன் பாடல்களில் பொதிந்து வைப்பதற்காக கடபயாதி' என்னும் வேத எண் குறியீடு முறையை கையாண்டார். வேத எண் குறியீட்டைப் பயன்படுத்தி, கணிதத்தின் உயர் கோட்பாடுகளை கவிஞர்கள்அழகிய கவிதைகளில் நேர்த்தியாக எழுதியிருப்பதை படிப்பது மகிழ்ச்சி தரும்.

கடவுள் ராமரை புகழ்ந்து தேசிகரால் எழுதப்பட்ட காவியம் ரகுவீர கத்யம். இது மகாவீர கத்யம் என்றும் அறியப்படுகிறது.

இதில் ராமரின் வீரச்செயல்களையும், தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் தெளிவாக விவரிக்கிறார்.

மேலும், யுத்த காண்டத்தில் கணித குறியீடுகள் கொண்ட வரியை பயன்படுத்தி இருந்தார். அதனை விரிவாக்கம் செய்து நான் ஆராய்ச்சி செய்தேன்.

அப்போது தான் ஸ்ரீராம பிரதிஷ்டை வருடமாகிய தற்பொழுது நடைபெறும் ஆண்டு 2024 என்பது மிக அற்புதமாக கணித முறையில் வெளிப்படுத்தப்படுவதை புரிந்து கொண்டேன்.

சோம வாரத்தில் (திங்கள் கிழமை), மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிபதி தினத்தில், மகர மாதம், விக்கிரம வருடம் 2080, தை மாதம் 8 கலி வருடம் 5124, சாலிவாகன சக வருடம் 1945, கொல்லம் வருடங்கள் முடிந்து 1198, என பல வகையில் தற்போதைய ஜனவரி 22 , 2024 ல் கோவில் கட்டப்படும் என தெளிவாக ஆனால் சூட்சுமமாக தேசிகர் குறிப்பிட்டுள்ளதை என்னால் அறியமுடிந்தது.

மிக நுட்பமான இந்த ஆராய்ச்சியை உயர் கணிதத்திலும், சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றவர்களே புரிந்து கொள்ள இயலும்.

தெளிவாகிறது


காலத்தால் அழியாத ராமாயணத்தின் முழு வடிவையும் இசையொத்த தாள வடிவில் விவரிக்கும் தேசிகரின் ரகுவீர கத்யமானது, புனித பூமியாகிய அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை தினத்தை மிகச்சரியாக கணித்து முன்பே தீர்க்க தரிசனத்துடன் அறிவித்திருக்கிறது என்பது என் ஆராய்ச்சியில் தெளிவாகிறது.

அனைத்தும் இறை செயல் எனும் போது, சரித்திர நிகழ்வான அயோத்தி கோவிலின் பிராண பிரதிஷ்டையும் முன் கூட்டியே இறைவன் தீர்மானிக்காமல் நடக்குமா?

இந்த ஆராய்ச்சியை பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்துஉள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்






      Dinamalar
      Follow us