/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீர் தொட்டியை இடித்து சாவடி கட்டும் ஊராட்சி
/
குடிநீர் தொட்டியை இடித்து சாவடி கட்டும் ஊராட்சி
ADDED : ஜன 24, 2024 05:42 AM

வாடிப்பட்டி : மதுரை மேற்கு ஒன்றியம் தோடநேரி ஊராட்சி கள்ளிக்குடியில் கால்நடைகளின் குடிநீர் தொட்டியை இடித்து கிராம சாவடி கட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இங்குள்ள ஏ.டி.,காலனியில் 13 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாகவே இருந்தது. இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் தொட்டியை இடித்துவிட்டு சாவடி கட்டி வருகிறது.
இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி தலைவர் ஜெயசங்கர்: கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி சேதமடைந்து விட்டது. துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் இடித்துவிட்டு பிரதம மந்திரி திட்டத்தில் கிராம சாவடி கட்டப்படுகிறது என்றார்.

